பிள்ளைகளின் அவசரவேளைகள்

பிள்ளைகளின் அவசரவேளைகள்

பிள்ளைகளின் அவசர வேளைகளுக்கான ஆலோசனைத் தொலைபேசி

Graubünden மாநில வைத்தியசாலையின் பிள்ளைகள் வைத்திய நிலையத்தில் பிள்ளைகளின் அவசர வேளைகளுக்கான ஒரு ஆலோசனைத் தொலைபேசி அழைப்பை ஒழுங்கு செய்துள்ளனர். பெற்றோருக்கு மருத்துவம் குறித்த கேள்விகள் இருப்பின் இலக்கம் 0900 25 66 11 ல் நிபுணத்துவமான விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

 

இந்த ஆலோசனைத் தொலைபேசி நாளாந்தம் 24 மணித்தியாலமும் சேவையிலுள்ளது. வீட்டுத் தொலைபேசியிலிருந்து ஒரு தொலைபேசி ஆலோசனையைப் பெறுவற்கான கட்டணம் நிமிடத்திற்கு 3.23 பிராங் (தை 2019ன் நிலை). உயிராபத்தான அவசர வேளைகளில் அவசர அழைப்பு இலக்கம் 144 அல்லது 112 ஐ அழைக்கவும்.