நலமாக வாழ்வது

நான் எவ்வாறு சுகாதாரமாக உண்ணலாம்?

நான் எவ்வாறு சுகாதாரமாக உண்ணலாம்?

ஒரு சுகாதாரமான மற்றும் பல் சத்துள்ள உணவு முக்கியமானது. ஏனென்றால் இதன்மூலம் ஒருவர் நலமாக இருப்பதாக உணர்வதுடன் தன்னை நோய்களிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ளலாம். பிள்ளைகளுக்கு

அவர்களின் வளர்ச்சிக்காக சுகாதாரமான உணவு விசேடமாகத் தேவைப்படுகின்றது. அப்படியானால் ஒரு சுகாதாரமான மற்றும் பல் சத்துள்ள உணவு என்றால் என்ன? இந்த உணவுப் பொருட்களை உணவுப்பொருள் ஆலோசகர்கள் ஒரு நாளுக்கு பின்வருமாறு விதந்துரைக்கின்றார்கள்:

 

  • நீர்ப்பதார்த்தம்: 1 தொடக்கம் 2 லீற்றர் குடிப்பது பொருத்தமானது. தாதுப் பொருட்கள் அடங்கிய நீர், வீட்டுக்குழாயில் வரும் தண்ணீர், பழ- மற்றும் மூலிகைத் தேனீர் சீனி இல்லாது குடிப்பது சிறப்பானது. கொபைன் அடங்கியவையான கோப்பி மற்றும் கறுப்புத் தேனீர் அல்லது பச்சைத் தேனீர் போன்றவற்றை அதிகமாகக் குடிக்காதீர்கள்.
  • 5 பங்கு மரக்கறி மற்றும் பழங்கள் பல நிறங்களில், சமைக்காமலும் சமைத்தும் சாப்பிடலாம். இனிப்புச் சேர்க்காத பழச்சாறுகளும் இதில் அடங்கும்.
  • 3 பங்குகள் தானிய உற்பத்திகள் (உ-ம்: பாண், இயலுமானவரை முழுமையான தானியச் சத்துடன்) , மாப்பொருட்கள், சோளன் அல்லது உருளைக் கிழங்கு போன்ற வேறு பொருட்கள் மற்றும் கோதுள்ள பழங்கள் (உ-ம். கடலை, பருப்பு)
  • 1 பங்கு புரதச்சத்து உ-ம். இறைச்சி, மீன், முட்டை, பால்கட்டி, Tofuஅல்லது Quorn.
  • 3 பங்கு பால் உற்பத்திகள், உ-ம். 2 dl பால், 180 கி. யோகர்ட் மற்றும் 60 கி. பால்கட்டி.
  • சமைக்கும்போது குறைவாக எண்ணெய் மற்றும் கொழுப்பு. விசேடமாக றப்ஸ்- அல்லது ஒலிவ் எண்ணெய் சுகாதாரமானது.
  • சிறிய அளவில் மட்டும்: இனிப்புவகைகள் (சொக்லட், கேக்), உப்பான கொறிக்கும் பண்டங்கள் (சிப்ஸ்), இனிப்பான பானங்கள் (கோலா) மற்றும் மதுபானம். பிள்ளைகள் கொபைன் அடங்கிய உற்சாக பானங்களைக் குடிக்கக் கூடாது என நிபுணர்கள் விதந்துரைக்கின்றனர்.