ஆலோசனை

ஆலோசனை

பிரச்சினைகளின்போது நான் மற்றும் எனது பிள்ளை எங்கிருந்து உதவிகளைப் பெறலாம்?

சுவிசில் பெற்றோர், குடும்பங்கள் மற்றும் பிள்ளைகளுக்கு உதவிகளை வழங்கக்கூடிய பல்வேறு வசதி வாய்ப்புகள்; நடைமுறையில் உள்ளன. இந்த ஆலோசனைகள் அதிகமாக இலவசமானவை.

 

பெற்றோர் ஆலோசனை நிலையம்

குழந்தைகள் மற்றும் சிறுபிள்ளைகளின் பெற்றோர்கள், பெற்றோர் ஆலோசனை நிலையத்தைத் தொடர்புகொள்ளலாம். இவர்களிற்கு அங்கு உணவூட்டல், கவனிப்பு, பராமரிப்பு மற்றும் வளர்ப்புக் குறித்த கேள்விகள் இருப்பின் உதவி வழங்கப்படும். அத்துடன் பிள்ளை அடிக்கடி சத்தமாக அழுதால் அல்லது அமைதியற்று இருந்தால், நீங்கள் உதவியைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக நீங்கள் ஒரு ஆலோசனை நிலையத்தை நாடலாம். பெற்றோர் ஆலோசனை அலுவலகர்கள் நீங்கள் விரும்பினால் உங்கள் வீட்டிலோ அல்லது தொலைபேசியிலோ அல்லது இணைய வழியாகவோ ஆலோசனைகளை வழங்குவார்கள். உங்கள் பிரதேசத்தின் ஆலோசனை வசதிகள் குறித்த தகவல்களை நீங்கள் உங்கள் நகரசபையில் பெற்றுக்கொள்ளலாம்.

 

பள்ளி உளவியல் சேவை

Graubünden மாநிலத்தில் பிரதேசச் செயலகங்கள் பின்வரும் இடங்களில் உள்ளன Chur, Davos/Platz, Domat/Ems, Ilanz, Landquart, Poschiavo St. Moritz, Scuol, Roveredo மற்றும்; Thusis. மேலதிக தகவல்கள் மற்றும் இதுபற்றிய தொடர்பு முகவரிகளை Amts für Volksschule und Sport ன் (மக்கள் பாடசாலை மற்றும் விளையாட்டுக்கான திணைக்களம்) இணையத்தளத்தில் காணலாம்.

 

க்ராவ்புண்டன் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான மனநோய்ச் சிகிச்சை

பிள்ளைகள்- மற்றும் இளையோருக்கான உளவளச்சேவை உள ரீதியான மற்றும் உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு மிகவும் பெறுமதியான ஆலோசனைகளும் சிகிச்சைகளும் வழங்குகின்றது. இதன் மத்திய நிலையம் Chur ல் உள்ளது. மேலதிக பிரதேச நிலையங் கள் Davos, Ilanz, Samedan, Roveredo und Poschiavo. ல் உள்ளன.

 

மேற்படி வசதிகள் குறித்த தகவல்கைளயும் மத்திய- மற்றும் பிரதேச நிலையங்களின் தொடர்பு முகவரிகளையும் இணையத்தளத்தில் நீங்கள் காணலாம்

 

ஆபத்திலுள்ள பிள்ளைகள் மற்றும் இளையோருக்கான உதவி

Pro Juventute ன் அவசர உதவி இலக்கமான 147 பிள்ளைகளுக்கு மற்றும் இளையோருக்கு கேள்விகள், பிரச்சினைகள் மற்றும் அவசர நிலமைகளின் போது உதவிகளை வழங்கும். எந்த நேரத்திலும். தொலை பேசி, SMS, Chat, மின்னஞ்சல் மற்றும் இணையச்சேவை ஊடாக இந்த சேவையை பெறலாம்.