பாலர்பாடசாலை- மற்றும் பாடசாலைப் பிள்ளைகளைப் பராமரிப்பது

மதியம் மற்றும் பாடசாலைக்குப் பின்னரான பராமரிப்பு

மதியம் மற்றும் பாடசாலைக்குப் பின்னர் யார் எனது பிள்ளையைப் பராமரிப்பர்? 

சில நகரங்களில் நாளாந்தப் பராமரிப்பு நிலையம் அல்லது பிள்ளைகளுக்கான நாளாந்தப் பராமரிப்பு இடங்கள் உள்ளன. அங்கு பிள்ளைகள் பாலர்பாடசாலைக்கு மற்றும் பாடசாலை நேரத்திற்கு வெளியாகப் பராமரிக்கப்படுவார்கள். பிள்ளைகள் அங்கு மதியஉணவையும் உண்பார்கள். சில பாடசாலைகள் சொந்தமாக ஒரு மதியப் பராமரிப்பை வழங்குவார்கள். இது வழக்கமானதல்ல.

 

பல நகரங்களில் மதிய வேளைகளில் ஒரு மதிய உணவுக்கான ஆவைவயபளவளைஉh எனும் வசதி உள்ளது, அங்கு பிள்ளைகள் உண்ணலாம். நகரங்களின் பராமரிப்பு வசதிகள் குறித்து பாலர்பாடசாலையில் அல்லது பாடசாலையில் நீங்கள் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

 

பராமரிப்புச் செலவுகள் பெற்றோரின் வருமானத்தில் தங்கியிருப்பதுடன் பெற்றோரால் செலுத்தப்பட வேண்டும்.