பாலர்பாடசாலை- மற்றும் பாடசாலைப் பிள்ளைகளைப் பராமரிப்பது

எனது பிள்ளை நோய் வாய்ப்பட்டுள்ளது.

எனது பிள்ளைக்கு நோய் ஏற்பட்டால், நான் யாருக்கு அறிவிக்க வேண்டும்?

பிள்ளைக்கு நோய் ஏற்பட்டால், நீங்கள் பாலர்பாடசாலை ஆசிரியருக்கு அல்லது ஆசிரியைஃஆசிரியருக்கு அதுகுறித்து கட்டாயமாக அறிவிக்க வேண்டும். ஆகவே பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்பாக பாலர்பாடசாலைக்கு அல்லது பாடசாலைக்கு தொலைபேசியில் அழையுங்கள். சில பாலர்பாடசாலை- அல்லது கற்பிக்கும் நபர்கள் அவசர தேவைக்காக தமது தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தை வழங்கியிருப்பார்கள்.

 

உங்கள் பிள்ளைக்கு நோய் ஏற்பட்டால், நீங்கள் வேலைக்குச் செல்லாது வீட்டில் இருப்பதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது. பிள்ளைக்கு நோய் ஏற்பட்டால் வருடத்தில் எத்தனை நாட்கள் வேலைக்குச் செல்லாது இருக்கலாம் என்பதனை உங்கள் தொழில் வழங்குனரிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.