இணைப்புப்பால வசதிகள்

இணைப்புப்பால வசதிகள்

எனது பிள்ளை தொழிற்கல்விக்கான இடத்தைப் பெறாவிட்டால், நான் என்ன செய்வது?

இளையோர், எவ்வித தொழிற்கல்விக்கான இடத்தையும் பெறாவிட் டால், இணைப்புப்பாலம் என அழைக்கப்படும் வசதியைப் பயன்படுத்த முடியும். இது ஒரு தற்காலிகத் தீர்வு, இதனுடன் ஒருவர் தனது சந்தர்ப்பத்தை அதிகரிப்பதுடன், ஒரு தொழிற்கல்விக்கான இடம் கிடைக்கும்வரை காலத்தை பிரயோசனமாக்கிக் கொள்ளலாம்.

 

இதன்போது இளையோரின் விசேடமான விருப்பங்களுக்கு ஏற்ற முறையில் தயார்படுத்தப்பட்ட வித்தியாசமனா இணைப்புப்பால வசதிகள் உள்ளன: விருப்பமானவர்கள் 10வது பாடசாலை வருடத்திற்கு செல்லலாம் இதைத்தவிர்த்து தொழிலுக்கு ஆயத்தமாகும் வருடம் , முன் வகுப்புகள் அல்லது பயிற்சி போண்றவையாகும்.

 

இணைப்புப்பால வசதிகள் இளையோரை ஒரு தொழிற்கல்விக்காக ஆயத்தப்படுத்துகின்றது. அவர்கள் தொழிலில் செய்முறைப் பயிற்சிகளைப் பெறுகின்றனர், அவர்களின் பாடசாலை பெறுபேறுகளைத் திறமையாக்குகின்றனர் மற்றும் அவர்கள் தமது திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்கின்றனர். அவர்களுக்கு தொழிலைத் தெரிவுசெய்ய அல்லது ஒரு தொழிற்கல்வி இடத்தைத் தெரிவு செய்ய உதவி வழங்கப்படுகின்றது.

 

நீங்கள் ஆசிரியர்களிடம் அல்லது தொழில் ஆலோசகர்களிடம் நேர காலத்துடன் இவ்வாறான வசதிகள் குறித்து கேட்டறிந்து கொள்ளுங்கள். நீங்கள் அங்கு, உங்கள் பிள்ளைக்கு எது மிகவும் உகந்தது, எப்போது மற்றும் எவ்வாறு விண்ணப்பிப்பது மற்றும் இதற்கான கட்டணம் எவ்வளவு என்பது குறித்து அறிந்து கொள்ளலாம். இதன்போது கட்ட ணத்திற்கான உதவிக்கும் விண்ணப்பிக்கலாம், இதற்கான கால எல்லைகளை அவதானத்தில் கொள்ளுங்கள்.