வளர்ப்பது

விதிகளைத் தீர்மானித்தல்

எனது பிள்ளை எனது சொல்லைக் கேட்காவிட்டால், நான் என்ன செய்வது?

அனைத்துக் குடும்பங்களிலும் பிள்ளைகள் சிலவேளைகளில் சொல்வழி கேட்காமல் இருப்பதுண்டு. இதுகுறித்து நீங்கள் நேரடியாக உங்கள் அபிப்பிராயத்தைக் கூறுவது, நல்ல விடயம். உங்கள் பிள்ளையுடன் இதுகுறித்து நீண்ட நேரத்திற்குப் பேசிக்கொண்டிராதீர்கள். தெளிவாக „நீ இப்படிச் செய்வது எனக்கு விருப்பமில்லை! நீ அதை விளங்கிக் கொண்டாயா?“ என்பது மேலும் பலனைத் தரும். கண்களினால் பார்வையிடுதலைச் செய்து கொள்ளுங்கள்.

 

உங்கள் பிள்ளையிடம் தீர்மானிக்கப்பட்ட விடயங்கள் மற்றும் விதிகள் குறித்து ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். விதிகளை மதிக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து நீங்கள் எடுத்துக் கூறுங்கள்: உதாரணமாக பிள்ளைகள் சிலநாட்களுக்கு தொலைக்காட்சி பார்க்க அனுமதியில்லை அல்லது இளையவர்கள் அடுத்த சனிக்கிழமை தமது நண்பர்களை சந்திப்பதற்கு அனுமதியில்லை போன்றவைகள்.

 

நிச்சயமாக இப்படியான விளைவுகளால் பிள்ளைகள் கோபப்படுவார்கள். இதன் மூலமாக நீங்கள் உங்களை அழுத்தத்திற்கு உள்ளாவதற்கு அனுமதிக்காதீர்கள். நினைவிற் கொள்ளுங்கள்: தெளிவான விதிகள் உறுதியையும் சரியான நிலைப்பாட்டையும் கொடுக்கின்றன. உங்கள் மகள் அல்லது மகன் வேறு இடங்களிலும் பாடசாலையில், போக்குவரத்தில், தொழில் உலகில் அல்லது விடுமுறைக் காலத்தில் மீண்டும் மீண்டும் விதிகளைச் சந்திக்ககூடும்,.