வளர்ப்பது

போதைப்பொருட்கள் மற்றும் பலவற்ரிற்கு அடிமையாகும் பிரச்சினைகளிலிருந்து பாதுகாப்பு

நான் எனது பிள்ளையை போதைக்கு அடிமையாகும் பிரச்சினைகளிலிருந்து எவ்விதம் பாதுகாப்பேன்?

அனைத்து இளையவர்களும் முன்னராகவோ அல்லது பின்னராகவோ, மதுசாரமோ அல்லது போதைப்பொருளோ தங்கள் கையில் கிடைக்கும் ஒரு நிலை ஏற்படலாம். முக்கியமானது என்னவென்றால், அவர்கள் அதற்கான எல்லைகளைத் தாமாகவே தீர்மானித்துக் கொள்வதுடன் ,வேண்டாம் என்றும் கூறப் பழகிக் கொள்ள வேண்டும். சிறப்பான பாதுகாப்பு என்னவென்றால், உங்கள் பிள்ளை துணிவு, தன்நம்பிக்கை மற்றும் சொந்தப் பொறுப்புணர்வுடன் வளர்வதாகும்.

 

சிறு பிள்ளைகளுடன் போதைப் பொருட்களின் ஆபத்துக் குறித்துப் பேசுவது பலன் தராது. ஆனால் அவர்கள் பெரியவர்களானதும் இது பலனைத்தரும், அவர்களுடன் போதைப்பொருள் பிரச்சினைகள் மற்றும் புகையிலை, அல்ககோல் மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கதைத்துக் கொள்ள வேண்டும். பயமுறுத்துவதோ அல்லது பிரசங்கம் வைப்பதையோ தவிர்த்து, விடய தானமுள்ள தகவல்களைத் தெரிவிப்பது உதவி புரியும்.