ஓய்வுநேரம்

இளையோர் சேவை

இளையோர் சேவை

இளையோர் சேவை பிள்ளைகள், இளையோர் மற்றும் வயதுவந்த பிள்ளைகள் சுதந்திரமாகச் செயற்படும் வழிக்கு ஊக்கமளிக்கின்றது. புசயரடிüனெநn மாநிலத்தில் இளையோர் சேவைக்கு நகரங்களில் 50 மூ துறைசார் வசதிகள் உள்ளன, இதற்காக பல நகரங்களில் இளையோர்களுக்கான இடங்கள் வழங்கப்பட்டுள்ளன, இவை புதன் பின்னேரங்களில், வெள்ளிக்கிழமை- அல்லது சனிக்கிழமை மாலைகளில் திறந்திருக்கும். இளையோர் சேவை இலவசமானது என்பதுடன் இவை அனைவருக்குமாக செயல்ப்படுகின்றது.

 

இளையோர் சேவை என்பது, பிள்ளைகள், இளையோர் மற்றும் வயதுவந்த பிள்ளைகளுக்கு சமூகத்தில் சமூக, கலாச்சார மற்றும் அரசியலில் ஒத்துழைப்புக் கொடுப்பதுடன், அவர்கள் தன்நிறைவுள்ளவர்களாக உணர்ந்து கொள்ளவும் ஒரு மனிதராக வளர்ச்சி பெறவும், தாமாகவும் மற்றவர்களுடன் ஒன்றுசேர்ந்து பொறுப்புணர்ச்சி உள்ளவர்களாகவும், சமூகத்தின் நடவடிக்கைகளில் பங்கெடுப்பவர்களாகவும் மாறப் பங்களிப்பு வழங்குகின்றது. இது திட்டங்கள், நிகழ்வுகள், இளையோருக்கான மண்டபங்கள் அல்லது பிள்ளைகள் மற்றும் இளையோர் பங்கெடுக்கும் நிகழ்வுகளுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக அமைந்திருக்கும்.

 

நீங்கள் வசிக்கும் நகரத்தில் இளையோர் சேவை பற்றி என்ன மாதிரியான வசதிகள் செய்துள்ளனர் என அறிந்து கொள்ளவும்.