ஓய்வுநேரம்

மற்றவர்களுடன் விளையாடுதல்

எனது சிறுபிள்ளை வேறு பிள்ளைகளுடன் எங்கு விளையாடலாம்?

பொதுப் பூங்காக்களில் உள்ள விளையாட்டுத் திடல்கள் அனைத்துப் பிள்ளைகளும் பெற்றோர்களும் போகக்கூடியது. பிள்ளைகள் மண்ணில் விளையாடுவதை, சறுக்குவதை அல்லது ஊஞ்சல் ஆடுவதை மிகவும் விரும்புவார்கள். ஆகவே எவ்வளவு தடவைகள் உங்களால் இயலுமோ அவ்வளவு தடவைகள் பிள்ளையை பக்கத்திலிருக்கும் விளையாட்டுத் திடலுக்குக் கூட்டிச்செல்லுங்கள். இதன்மூலம் அவர்களது உடல்நல வளர்ச்சிக்கு நீங்கள் ஊக்கமளிக்கின்றீர்கள்.

 

ஏறத்தாழ 2 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு விளையாட்டுக் குழுக்களும் உள்ளன. வாரத்தில் ஒருசில மணித்தியாலங்கள் அவர்கள் துறைசார் நபர்களால் பராமரிக்கப்படுவதுடன் ஊக்கமளிக்கப்படுவார்கள். இவ்வகையான குழுக்களில் உங்கள் பிள்ளைக்கு ஒரே வயதினரோடு ஒன்றாகப் பழகும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது, அதேவேளையில் பாலர்பாடசாலை மற்றும் பாடசாலைக்கு தயார்படுத்தலும் ஏற்படுகின்றது. விளையாட்டுக் குழுக்கள் குறித்த தகவல்களை உங்கள் பிரதேசத்திலுள்ள நகரசபையில் பெற்றுக்கொள்ளலாம்.