சிறுபிள்ளைகள்

பிள்ளை மற்றும் தொழில்

நான் வேலைக்குச் சென்றால், எனது பிள்ளையை யார் பராமரிப்பர்?

குழந்தைகள் மற்றும் சிறு பிள்ளைகளுக்குப் பராமரிப்புத் தேவைப்படுகின்றது. இதன்மூலம் அவர்கள் நன்கு வளர்ச்சியடைவதற்காக, பலவழிகளில் ஊக்கமும் உற்சாகமும் வழங்கப்பட வேண்டும். இந்த முக்கிய செயற்பாட்டை குடும்பத்திலுள்ள ஒருவரால் அதிகமாகப் பொறுப்பேற்க முடிவதில்லை.

 

ஏறத்தாழ நான்கு வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு பல உள்ஊராட்சிசபைகளில் பிள்ளைகள் பராமரிப்பு அல்லது சிறுபிள்ளைகளுக்கான நாள் பராமரிப்பு உள்ளன. அங்கு சிறார்களுக்கு பகல் வேளைகளில் துறைசார் நபர்களால் பராமரிப்பும் ஊக்கமும் வழங்கப்படும். பொதுவாக பெற்றோர் தமது பிள்ளை ஒவ்வொரு நாளும், ஒருசில நாட்கள் மட்டும் அல்லது அரை நாள் மட்டும் பிள்ளைகள் பராமரிப்பு நிலையத்திற்கு செல்வது குறித்து முடிவு செய்யலாம்.

 

இதைவிடவும், பிள்ளையை ஒரு நாள் பராமரிப்புத்தாய்; அல்லது நாள் பராமரிப்புக் குடும்பத்தில; பராமரிப்பிற்காக அனுமதிக்கலாம். நாள் பராமரிப்புத் தாய் என்பவர் உங்கள் பிள்ளையை முழுநாள், அரைநாள் அல் லது மணித்தியால ரீதியாக பராமரிக்கும் பெண். இதுகுறித்த மேல திக தகவல்களை குடும்பத்துக்கு மேலதிகமான பிள்ளைப் பராமரிப்புதுறை சார் நிலையத்தில் famur பெற்றுக்கொள்ளலாம்.

 

தொடர்பு

தொடர்பு

  • Fachstelle für familienergänzende Kinderbetreuung famur – für Familien in Graubünden

    குடும்பத்துக்கு மேலதிகமான பிள்ளைப் பராமரிப்பு துறைசார் நிலையம் famurReichsgasse 257000 Chur081 300 11 40www.famur.ch