சிறுபிள்ளைகள்

விளையாட்டுக் குழு

நான் எனது பிள்ளையை ஒரு விளையாட்டுக்குழுவிற்கு அனுப்ப வேண்டுமா?

விளையாட்டுக்குழுவில் பிள்ளைகள் வளர்ச்சி பெற ஊக்கம் கொடுக்கப் படுவதுடன் பாலர் பாடசாலை செல்வதற்கு ஆயத்தப்படுத்தப்படுவார் கள். அவர்கள் வேறு பிள்ளைகளுடன் ஒன்று சேர்ந்து இருப்பதற்கு, விளையாடுவதற்கு, பகிர்வதற்கு, ஒருவர் ஒருவரை கவனித்துக்கொள் வதற்கு, சண்டை பிடித்து பின் சமாதானமாகிக் கொள்வதற்குக் கற்றுக் கொள்வார்கள். தற்சமயம் உங்கள் பிள்ளை உள்ளுர் மொழியை மிகக் குறைவாகப் பேசுமானால், மொழியைத் திறமையாக்குவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையும்.

 

உங்கள் ஊரில் உள்ள விளையாட்டுக்குழு வசதிகள் குறித்து உங்கள் கிராமசபையில் நீங்கள் விசாரித்து அறிந்து கொள்ளுங்கள்.