பாடசாலை

பாடசாலை நடைமுறைகள்

Graubünden ல் பாடசாலை நடைமுறை எவ்வாறு அமைந்துள்ளது?

சுவிசில் பாடசாலை நடைமுறை மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசப் படுகின்றது. Graubünden மாநிலத்தில் பாடசாலை 7 வயது தொடக் கம் 16 வயது வரை (ஆரம்பப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி பிரிவு I) கட்டாயமானது மற்றும் முழுவதுமாக ஒன்பது வருடங்கள் நடைபெறும்.

 

அதிகமான பிள்ளைகள் பாடசாலை செல்லு முன்பாக இரண்டு வருட காலம் பாலர்பாடசாலைக்கு செல்வார்கள். பாலர்பாடசாலையின் பின் ஆரம்ப பாடசாலை தொடரும் (ஆறு வருடங்கள்), அதன்பின் இடைநிலைப்பள்ளி பிரிவுI (மூன்று வருடங்கள்). இல் உயர்வான மற்றும் தாழ்வான தரங்கள் உள்ளன. Graubünden ல் றியால் பாடசாலை உள்ளது (சாதாரண அறிவு), இடைநிலைப்பள்ளி (விருத்தியடைந்த அறிவு) அதேபோன்று குறைந்த உயர்கல்லுரி மற்றும் உயர்கல்லூரி உள்ளன.

 

பொதுவான பாடசாலையை மக்கள் பாடசாலை என அழைக்கப்படுவதுடன் இலவசமானதாகும். பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு ஒரு தனியார் பாடசாலையைத் தெரிவு செய்வது அவர்கள் விருப்பத்தைப் பொறுத்த தாகும். ஆனால் தனியார் பாடசாலைக்கு கட்டணம் செலுத்த வேண்டும். Graubünden மாநிலத்தில் மக்கள் பாடசாலை மற்றும் விளையாட்டுக்கான திணைக்களம் கட்டாய பாடசாலைக்குப் பொறுப்பு வகிக்கின்றது. உள்ஊராட்சிசபை பாடசாலை நிர்வாகத்தை ஒழுங்கு செய்கின்றன.

 

அனைத்துப் பாடசாலைகள் குறித்த தகவல்களை உங்கள் உள்ஊராட்சிசபையின் பாடசாலையில் அல்லது Amt für Volksschule und Sport (மக்கள் பாடசாலை மற்றும் விளையாட்டுக்கான திணைக்களத்தில்) பெற்றுக்கொள்ளலாம்.

தொடர்புபடுத்தல்கள்

தொடர்பு

தொடர்பு

  • Amt für Volksschule und Sport Graubünden

    க்ராவ்புண்டன் Graubünden தொடக்கப் பள்ளி மற்றும் விளையாட்டுத் துறைQuaderstrasse 177000 Chur081 257 27 36www.avs.gr.ch