பாடசாலை

பாலர்பாடசாலை

பாலர்பாடசாலை வழமையான பாடசாலை போன்று இயங்குகின்றதா?

பாலர்பாடசாலை என்பது பாடசாலைக்கு முன்தரமாகும். பிள்ளைகள் அதிகம் விளையாடுவார்கள், அவர்கள் வரைவார்கள், பாடுவார்கள், நடனமாடுவார்கள் மற்றும் பொருத்துவார்கள் மற்றும் பாலர்பாடசாலை ஆசிரியர்களிடமிருந்து குறுகிய பாடங்களையும் பெற்றுக்கொள்வார்கள். சிலவேளைகளில் பிள்ளைகள் தனியாக விளையாடுவார்கள் அல்லது வேறு பிள்ளைகளுடன், மற்றும் சில வேளைகளில் பாலர்பாடசாலை ஆசிரியர்களின் வழிநடத்தலில் விளையாடுவார்கள்.

 

விளையாடுதல் மற்றும் பாடங்கள் ஊடாக பிள்ளைகள் முக்கிய திறமைகளைக் கற்றுக்கொள்வார்கள், இவை அவர்களுக்கு பாடசாலையிலும் பிற்கால வாழ்விலும் மிகவும் தேவையானதாக இருக்கும்: கேட்டுக்கொள்ளுதல், தாமாக விளங்கப்படுத்துதல், நீண்ட நேரத்திற்கு ஒரு வேலையில் அல்லது ஒரு விளையாட்டில் நிலைத்திருத்தல், மனதை ஒருநிலைப்படுத்தல், சொந்தமாகத் திட்டமிடல் மற்றும் முடிவு செய்தல் போன்றவை. மேலும் அவர்கள் தாம் வேறு பிள்ளைகளுடன் மற்றும் வயதுவந்தவர்களுடன் பழகிக்கொள்ளவும் பொதுவான விதிகளை மதிப்பதற்கும் கற்றுக்கொள்கின்றனர். இந்தத் திறமைகள் பிள்ளைகளுக்கு பாடசாலையில் வெற்றிபெறும் திறமையான சந்தர்ப்பங்களை வழங்கலாம்.