பாடசாலை

பாடசாலைப் பாடங்கள்

பாடசாலையில் எந்தப் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன?

வழமையாக Graubünden ல் உள்ள பிள்ளைகள் பின்வரும் பாடங்களைக் கற்றுக்கொள்வார்கள்: டொச் (றொமானிஸ் பேசும் கிராமசபைகளில் றொமானிஸ், இத்தாலியம் பேசப்படும் கிராமசபைகளில் இத்தாலியம் - இரு மொழிகளில் கற்பிக்கப்படும் பாடசாலை உள்ள கிராமசபைகள் உள்ளன), கணிதம், மாநிலத்தின் இரண்டாவது மொழி (கிராமசபையை பொறுத்து இத்தாலியம், றொமானிஸ் அல்லது டொச்), இயற்கைவளம், எழுதுதல், விளையாட்டுப் பாடம், இசை, வரைதல் / ஆக்குதல், கைவேலை மற்றும் பயிற்சிகள், ஆங்கிலம் மற்றும் சமயம். பல ஆசிரியர்கள் ஒழுங்காக முழு வகுப்பினரோடும் கலந்துரையாடல்களை மேற்கொள்வர் (வகுப்புக் குழு).

 

மேலதிக விபரங்களை உங்கள் நகர பாடசாலை செயலரிடம் கேட்ட றிந்து கொள்ளுங்கள்.