பாடசாலை

பாடசாலைப் புள்ளிகள்

பாடசாலைப் புள்ளிகள்

Graubünden மாநில பாடசாலை மாணவ மாணவிகள் ஒவ்வொரு பாடசாலைத் தவணை முடிவிலும் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளுவர், இதில் ஒரு தனிப்பட்ட கற்கும் அறிக்கை இணைக்கப்பட்டிருக்கலாம். இந்தக் கற்கும் அறிக்கை, பிள்ளைகள் விடயங்களை அவதானிக்கும் தற்போதைய நிலை மற்றும் கற்கும்-, செயற்படும்- மற்றும் சமூக நடைமுறைகள் குறித்த முக்கிய அவதானிப்புகளை உள்ளடக்கியிருக்கும். 1வது மற்றும் 2வது பிறிமா வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பெறுபேறுகள் புள்ளிகளாகவோ- அல்லது எழுத்து மூலமான சான்றிதழ்களாகவோ அல்லது ஒரு கற்கும் அறிக்கை மூலமாகவோ வழங்கப்படலாம்.

 

பெறபேறுகளின் புள்ளிகள் 1லிருந்து 6 வரை:

 

புள்ளிகளின் அர்த்தம்:

 

1 = மிகவும் குறைவு

2 = குறைவு

3 = போதாது

4 = போதும்

5 = நன்று

6 = மிகவும் நன்று

 

சான்றிதழ்களில் அரைப் புள்ளிகளும் இருக்கலாம், உதாரணமாக 4-5 அல்லது 5-6 என.

 

பெற்றோர் இச் சான்றிதழில் கையொப்பமிடுவதுடன் பிள்ளை மீண்டும் அதை பாடசாலையில் ஒப்படைக்க வேண்டும்.

 

வகுப்பேற்றம்

பாடசாலை வருடத்தின் முடிவில் வகுப்பு ஆசிரியர் மாணவ மாணவிகளை அடுத்துள்ள மேல் வகுப்பிற்கு ஏறிச்செல்வதை முடிவு செய்வார். இதன்போது அவர் கற்பித்த வேறு ஆசிரியர்களுடனும் கலந்தாலோசித்துக் கொள்வார். இந்த முடிவின்போது மாணவ மாணவிகள் கற்கும் நோக்கத்தை எவ்வளவு அடைந்துள்ளார்கள் மற்றும் அவர்கது கற்கும்-, செயற்படும்- மற்றும் சமூக நடைமுறை எவ்வாறு அமைந்திருந்தது என்பன கவனத்தில் எடுக்கப்படும்.

 

ஆசிரியர்கள் பெற்றோருடன் மற்றும் பிள்ளையுடன் வகுப்பேற்ற முடிவு குறித்து ஒன்றுசேர்ந்த கலந்துரையாடலை மேற்கொள்வது வழமையாகும்.