பின்பாக வந்து குடியேறிய இளையோர்கள்

பின்பாக வந்து குடியேறிய இளையோர்கள்

பின்பாக வந்து குடியேறிய இளையோர்கள்

கல்விதான் அதிகளவில் பொருளாதார மற்றும் சமூக வாழ்வில் பங்கெடுப்பதை முடிவுசெய்கின்றது. ஆகவே, பிறமொழி பேசும் இளையோர், தமது கட்டாய பாடசாலைக் கல்வியை ஏற்கனவே தமது நாட்டில் கற்றிருந்து, குடும்பத்துடன் இணைவதற்காக சுவிசுக்கு வந்திருந்தால், ஒரு தொழிலைக் கற்றுக்கொள்ளும் பயிற்சியைத் தேடிக்கொள்வது முக்கியமானதாகும்.

 

இதன்படி இதில் சேர்ந்துகொள்வதற்கு, ஒரு குறிப்பிட்ட முன்நிபந்தனைகளைக் கொண்டிருக்க வேண்டும்: பாடசாலை அடிப்படை அறிவு, விசேடமாக டொச் மற்றும் கணிதத் துறையில் மற்றும் கற்றல்- மற்றும் தொழில்நுடப அறிவில் தன்நம்பிக்கை, ஆயத்தப்படுத்தும் திறமை மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்கும் மனப்பான்மை என்பன.

 

பிறமொழி பேசும் இளையோரின் விசேட தேவைகருதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கற்கை வசதிகள், ஒரு இணைப்புப்பால கற்கை வசதிகளை அல்லது ஒரு தொழிற்கல்வியைக் கற்க உதவுகின்றன.