பாடசாலைப் பிள்ளைகளின் உதவி

பிரச்சினைகளின் போதான உதவி

எனது பிள்ளை பாடசாலையில் திருப்தி இல்லாமல் இருக்கிண்றது அல்லது விசேட பிரச்சினைகளில் அவருக்கு உதவி தேவைப்படுகின்றதா?

நீங்கள் இது குறித்து பாலர்பாடசாலை ஆசிரியர்களுடன் அல்லது மற்றைய ஆசிரியர்களுடன் கதைத்துக் கொள்வது முக் கியமானதாகும். இதனாலேயே நீங்கள் ஒன்றுசேர்ந்த ஒரு தீர்வைத் தேடிக்கொள்ள முடியும். இதற்கு ஒரு பிள்ளைகளுக்கான வைத்தியரையோ, ஒரு உளவியல் நிபுணரையோ அல்லது இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற ஒருவரையோ துணைக்கு அழைத்துக் கொள்ளலாம். நீங்கள் பாலர் பாடசாலை ஆசிரியர்களுடன் அல்லது மற்ற ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒரு தீர்வைக் காண முடியாது போனால், பாடசாலை அதிபர்களுடன் கதையுங்கள். அத்துடன் பாடசாலைப் பராமரிப்புப் பகுதியும் (உள்ளுர் பாடசாலைத் திணைக்களம்) மேலதிக உதவிகளை வழங்கலாம்.

 

பிள்ளைகளுக்கு விசேடமான பிரச்சினைகள் இருப்பின் அவர்களுக்கு உதவி வழங்குவது முக்கியமானதாகும். வித்தியாசமான பிரச்சினைகளுக்கு இலவசமான உதவிகள் உள்ளன. பிள்ளைகளுக்குக் கதைப்பதில் பிரச்சினைகள் இருப்பின், பேசுவதற்குப் பயிற்றுவிக்கும் துறை சார் நிபுணர்கள் உதவலாம், வாசிப்பது மற்றும் எழுதுவதில் பிரச்சினைகள் இருப்பின் இதற்கான சிகிச்சைகள் உதவலாம், அசைவதில் பிரச்சினைகள் இருப்பின் இயங்கும் சிகிச்சைமுறை- உதவலாம் மற்றும் கற்பதில் பிரச்சினைகள் இருப்பின் மேலதிக உதவி வகுப்புகள் உதவலாம்.