மருத்துவக் காப்புறுதி

செலவை சேமித்தல்

எவ்வாறு நான் மருத்துவக் காப்புறுதிச் செலவை சேமித்துக் கொள்ளலாம்?

மருத்துவக் காப்புறுதிக் கட்டணம் வீட்டுச் செலவுப் பட்டியலைப் பாதிக்கலாம். இக் கட்டணத்தைக் குறைப்பதற்கு வித்தியாசமான வழிகள் உள்ளன.

 

  • சொந்தமாகச் செலுத்தும் பணத்தை உயர்வாக்குவதன் மூலம்: சொந்த மாகச் செலுத்தும் பணம் உயர்வானதாக இருப்பின் (ஆகக்கூடியது 2500 பிராங்) மதாந்தக் கட்டணம் நன்கு குறைந்திருக்கும். அவதானம்: நீங்கள் மிகக் குறைவான நோயுடையவராகவும்
  • மிகக் குறைவாக வைத்தியரிடம் செல்லுபவராகவும் இருந்தால் மட்டுமே இது இலாபம் தரும். மிகவும் மலிவான மருத்துவக் காப்புறுதி மூலமாக: மருத்துவக் காப்புறுதியின் கட்டணங்கள் மற்றும் சேவைகளை ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டுப் பாருங்கள், உதாரணமாக மத்திய அரசின் இணையத்தளத்தில் கட்டணத்தைக் கணித்துக் கொள்ளுங்கள்.
  • தனிப்பட்ட ரீதியில் மாநிலத்தின் கட்டண உதவி மூலமாக: குறைந்த வருமானம் உடைய நபர்கள் மாநிலத்தின் கட்டண உதவியைப் பெற உரித்துடையவர்கள். அதாவது, மருத்துவக் காப்புறுதியின் ஒரு பகுதியை மாநிலம் செலுத்தும். இதைப் பெறுவதற்கான உரித்திற்கு நீங்கள் ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண்டும். இது குறித்து உங்கள்

 

உள்ளுராட்சிசபையிலோ அல்லது Graubünden சமூகக் காப்புறுதித் திணைக்களத்திலோ கேட்டறிந்து கொள்ளுங்கள்.