மருத்துவக் காப்புறுதி

மருத்துவக் காப்புறுதிக்கான செலவு எவ்வளவு?

மருத்துவக் காப்புறுதிக்கான செலவு எவ்வளவு?

காப்புறுதி செய்யப்பட்ட நபர் மருத்துவக் காப்புறுதிப் பாதுகாப்பிற்கு ஒவ்வொரு மாதமும் ஒரு கட்டணத்தைச் செலுத்த வேண்டும்: இது மருத்துவக்காப்புறுதிக் கட்டணம் என அழைக்கப்படும். இந்தக் கட்டண த்தின் அளவு ஒவ்வொரு வருடமும் மாற்றமடையலாம். மருத்துவக் காப்புறுதி புதிய கட்டணங்கள் குறித்து காப்புறுதி செய்துள்ளவர்களுக்கு இலையுதிர்காலத்தில் எழுத்து மூலமாக அறியத்தரும் (இதன்பின் நீங்கள் விரும்பினால் மருத்துவக் காப்புறுதியைமாற்றிக்கொள்ளலாம்- இதன்போது நீங்கள் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள விலகிச் செல்லும் காலவரையறையை கவனத்தில் கொள்ள வேண்டும்!). காப்புறுதி செய்பவர்கள் இதன்மூலம் புதிய கட்டணத்தையும் காப்புறுதி அடையாள அட்டையையும் அத்துடன் காப்புறுதி இலக்கத்தையும் பெற்றுக் கொள்வார்கள். நீங்கள் இந்த அட்டையை எப்பொழுதும் உங்களுடன் வைத்திருக்க வேண்டும்: நீங்கள் மருந்துச்சாலை, வைத்தியரிம் அல்லது வைத்தியசாலை செல்லும்போது இதைக் காண்பிக்க வேண்டும்.

 

மருத்துவக் காப்புறுதியின் கட்டணம் காப்புறுதி நிறுவனங்கள் மற்றும் வசிக்கும் இடத்தைப் பொறுத்து வித்தியாசப்படும். அடிப்படைக் காப்புறுதியைப் பொறுத்தவரை அனைத்துக் காப்புறுதிகளும் ஒரேவிதமான சேவைகளுக்கே காப்புறுதி செய்யப்பட்டிருக்கும். கட்டணம் நீங்கள் தெரிவுசெய்த காப்புறுதி முறை மற்றும் தெரிவுசெய்த கட்டணம் செலுத்தும் அளவு போன்றவற்றால் வித்தியாசப்படும் (சொந்தமாகச் செலுத்தும் பணம்)

 

நீங்கள் காப்புறுதி முறையை சொந்தமாகத் தெரிவுசெய்யலாம்: நீங்கள் குறைவான கட்டணத்தை செலுத்துவீர்களானால், உதாரணமாக நீங்கள் விரும்பிய வைத்தியரைத் தெரிவுசெய்ய இயலாமல் இருக்கும். அதாவது, நீங்கள் முதலில் ஒரு குறிப்பிட்ட ஆண் அல்லது பெண் குடும்ப வைத்தியரிடம் அல்லது HMO (ஒரு சுகாதார நடுநிலையம்) செல்ல வேண்டும்.

 

உங்கள் மருத்துவக் காப்புறுதியிடம் சரியான தகவல்களைக் கேட்டறியுங்கள். ஒருமுறை ஒத்துப்பார்ப்பது பலனைத் தரும்!