வெலோ (மிதிவண்டி) செலுத்துதல்

வெலோ (மிதிவண்டி) செலுத்துதல்

நான் மிதிவண்டியில் பயணிக்கும்போது, எதை கவனத்திற்கொள்ள வேண்டும்?

வீதிப் போக்குவரத்தில் மிதிவண்டியைச் செலுத்துவதற்கு பரீட்சையோ அல்லது விசேட அனுமதி அட்டையோ தேவையில்லை. இருப்பினும் ஆண் மற்றும் பெண் மிதிவண்டி செலுத்துனர்கள் அமுலில் இருக்கும் போக்குவரத்து ஒழுங்கு விதிகளைக் கட்டாயமாகத் தெரிந்திருக்க வேண்டும்.

 

மிதிவண்டி செலுத்தும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் வீதிப்போக்கு வரத்தில் பாதுகாப்பு ஒரு முக்கிய விடயமாகும். உங்கள் மிதிவண்டி நன்கு ஓடக்கூடிய நிலையில் இருப்பதைக் கவனித்துக் கொள்ளுங்கள்- நன்கு சரிபார்க்கப்பட்ட பிறேக், ஒளிரும் கருவிகள் மற்றும் பின்பக்க வெளிச்சம் நன்கு காற்றடிக்கப்பட்ட சில்லுகள் போன்றவை. இயலுமான வேளைகளில் எல்லாம் தவறி விழுந்தால் தலையைப் பாதுகாப்பதற்காக ஒரு மிதிவண்டி தலைக் கவசத்தை அணிந்து கொள்ளுங்கள்.